பிரபாகரன் வாழ்க்கை திரைப்படமாகிறது

பிரபாகரன் வாழ்க்கை திரைப்படமாகிறது

1 mins read
46e55376-013b-4d2d-ad51-3b95607f9ad4
-

உலகெங்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் 'மாவீரர் தினம்' அனுசரிக்கப்பட்ட நிலையில், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இதற்கு 'சீறும் புலி' எனத் தலைப்பிட்டுள்ளனர். பிரபாகரன் வேடத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார். வெங்கடேஷ் குமார் இயக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பிரபாகரனின் பிறந்தநாளன்று வெளியானது. புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு முதலில் சூட்டப்பட்ட பெயர் ஹரிஹரன். பின்னர் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று அழைக்கப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தினரால் தம்பி என்று அழைக்கப்படுவதும் உண்டு. 'சீறும் புலி' இளையர்களை வெகுவாகக் கவரும் வகையில் உருவாகி வருவதாகத் தகவல். படத்தில் நடிப்பதற்காக பாபி சிம்ஹா சிறப்புப் பயிற்சி மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.