பொய் சொல்கிறார் சின்மயி: குற்றம்சாட்டுகிறார் ராதாரவி

பொய் சொல்கிறார் சின்மயி: குற்றம்சாட்டுகிறார் ராதாரவி

1 mins read
33960b67-327f-49d4-96c6-0e4e75fbd3db
-

பாலியல் தொல்லை தொடர்பாக பின்னணிப் பாடகி சின்மயி எழுப்பியுள்ள புகாரில் உண்மை இல்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார். சின்மயி சொல்வது அனைத்துமே பொய் என்றும் அவர் சாடியுள்ளார். ராதாரவி தலைமையில் இயங்கி வரும் தமிழ்த் திரைப்பட டப்பிங் (பின்னணிக் குரல் கொடுப்போர்) சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், பாலியல் தொல்லை புகாரை எழுப்பி கவிஞர் வைர முத்துவை தேவையின்றி சின்மயி மிரட்டியதாக ராதாரவி தெரிவித் துள்ளார்.

"வைரமுத்து விஷயத்தில் சின்மயி தமது கடப்பிதழ் தொடர்பாக ஒரு கதை சொன்னார். அதேபோன்றுதான் டப்பிங் சங்கத்துக்கு வாழ்நாள் உறுப் பினர் சந்தாவை செலுத்தியதாக அவர் கூறியதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். "பாலியல் தொல்லை குறித்து சின்மயி யார் மீது வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கட்டும். ஏன் அவர் பிறந்தபோதே 'மீ டூ' நடந்தது என்று கூட சொல்லட்டும். அவர் யார், யாரின் பெயர்களைக் கூறி பணம் பெற நினைக்கிறாரோ அந்தப் பெயர்களைச் சொல்லட்டும். "சின்மயி உள்நோக்கத்துடன் தான் புகார் தெரிவித்து வருகிறார்," என்கிறார் ராதாரவி.