ஐஸ்வர்யாவை தேடிவரும் வாய்ப்புகள்

ஐஸ்வர்யாவை தேடிவரும் வாய்ப்புகள்

1 mins read
6e659e54-0966-414c-ba1f-02180cb3722d
-

ஐஸ்வர்யா தத்தாவுக்கும் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் தேடி வருகின்றனவாம். அந்த வகையில் இதே 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகர் மகத்துடன் புதுப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். இது நகைச்சுவையும் காதலும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாக உள்ளது. ஏற்கெனவே 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்', 'ஆறாது சினம்' உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. எனினும் தற்போது கிடைத்தி ருக்கும் வாய்ப்பு தனக்கு வெகு வாகக் கைகொடுக்கும் என நம்புகிறாராம். அறிமுக இயக்குநர் பிரபுராம் இப்படத்தை இயக்குகிறார். "இவர் ஹாலிவுட் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். எனவே, அனைத்தையும் கச்சிதமாகத் திட்டமிட்டுச் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. மகத்துடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. அவர் இப்போதுதான் சிம்புவுடன் நடித்து முடித்துள்ளார். இந்த உற்சாகத்தில் புதுப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்," என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் ஐஸ்வர்யா. 'அத்தாரிண்டிகி தாரேதி' என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் மறுபதிப்பாக ஐஸ்வர்யா நடிக்கும் இந்தப் படம் உருவாகிறது. பொங்கல் பண்டிகையின்போது வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.