'விஸ்வாசம்' படத்தில் நயனின் தோற்றம்

'விஸ்வாசம்' படத்தில் நயனின் தோற்றம்

1 mins read
ac373a89-b235-438f-a67d-6ca31eb746ae
-

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் 'விஸ்வாசம்'. இந்தப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிக்கிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசை யமைக்கிறார் டி. இமான். படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறை வடைந்துவிட்ட நிலையில், இது வரை வெளியான சுவரொட்டிகளில் அஜித் சம்பந்தப்பட்ட படங்கள் மட்டுமே வெளியாயின. நாயகியான நயனோ, மற்ற நடிகர்களோ அந்த சுவரொட்டி களில் இடம்பெறவில்லை. தற்போது நயன்தாரா சம்பந்தப் பட்ட முதல் சுவரொட்டி வெளியிடப் பட்டிருக்கிறது. சேலை, கழுத்தில் நகைகள், நெற்றி வகிட்டில் குங்குமம் என்று ஒரு குடும்பப் பெண்ணாகக் காட்சியளிக்கிறார்.