தூய தமிழில் 'சீதக்காதி' படத்தின் இரண்டாம் பாடல்

தூய தமிழில் 'சீதக்காதி' படத்தின் இரண்டாம் பாடல்

1 mins read
1d21bb68-5ab2-45e2-af50-90fdf0d23816
-

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 25வது படம் 'சீதக்காதி'. இந்தப் படம் டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' திரைப்படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் விளம்பரத்திற்காக இதுவரை 'அய்யா' என்ற பாடலும் படத்தின் முன்னோட்டக் காட்சியும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்ப் பார்ப்பைத் தூண்டி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாடலான 'அவன்' பாடலின் வரிகள் கொண்ட காணொளி வெளியானது. மதன் கார்க்கி எழுதிய இப்பாடல் வரிகள் அற்புதமாக அமைந்துள்ளது. '96' பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்க, ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் பாடியுள்ளார்.

'அய்யா' பாடலை இயக்குநர் தியாகராஜா குமாரராஜன் தூய தமிழில் எழுதியதுபோலவே இந்த 2வது பாடலான 'அவன்' பாடலும் தூய தமிழில் அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களிலுள்ள பாடல்களில் தமிழ்ச் செய்யுள் நடை என்பது அரிதாகிவிட்ட நிலையில், 'சீதக்காதி' படத்தில் வெளியான இரண்டு பாடல் களிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத் திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் 75 வயதான நாடகக் கலைஞராக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார் என்பதால் நாடக மேடை பின்னணியை மக்களுக்கு எளிதில் உணரவைக்க இது போன்ற பாடல்களை அமைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.