'நான் கவித்துவமான பெண்'

'நான் கவித்துவமான பெண்'

1 mins read
17c6a6a1-ddcb-4f76-ba36-ed4266cef3ff
-

பாலா இயக்கத்தில் உருவாகும் 'வர்மா' படத்தில் இவர்தான் கதாநாயகி. மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர். அடிப் படையில் மாடல் அழகி மேகா சௌத்ரி. இப்போது சினிமா வாய்ப்பு கிடைத்திருப்பதால் நடிக்கிறார். முதல் படம் வெற்றி பெற்று, தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக் கும் பட்சத்தில் தொடர்ந்து நடிப் பது என திட்டமிட்டுள்ளாராம். இயக்குநர் பாலா மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகமாவதைப் பெருமையாகக் கருதுவதாகச் சொல்கிறார் மேகா. நடிகர் விக்ரமின் மகன் துருவ் இந்தப் படத்தின் கதாநாயகன். "தமிழ்த் திரையுலகின் பெரிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவர் என்னை அறிமுகப் படுத்துவதை பெருமையாக நினைக்கிறேன்.

அவர் பணியாற்றும் விதம் என்னை வியக்க வைத்துள்ளது. "அவருடன் பணியாற்றும் மற்றவர்களும் கடுமையாக உழைக்கிறார்கள். அதனால் தான் அவரது ஒவ்வொரு படமும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாகப் பேசப்படுகிறது." கதாநாயகன் துருவ் எப்படி? "புத்திசாலித்தனமும் அர்ப்பணிப்பும் கொண்ட நடிகர். தமிழில் சரளமாகப் பேசும் அளவுக்கு நான் இன்னும் தேறவில்லை. "படப்பிடிப்பின் போது வசனங்கள் புரியவில்லை என்றால் துருவ்தான் உடனடியாக உதவிக்கு வருவார். எனக்குப் புரியும் வகையில் அனைத்தையும் மொழிபெயர்த்து சொல்வார்," என்று பாராட்டும் மேகா, வணிகத்துறையில் பட்டப்படிப்பை முடித்தவர். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் செய்வது, விளம்பரப் படங்களில் நடிப்பது என தனது திரைப்பயணத்தைத் தொடங்கிவிட்டாராம். மேகாவின் முதல் படம் பெங்காலி மொழியில் வெளியான 'அமர் பிரேம்'. 'அர்ஜுன் ரெட்டி' தெலுங்குப் படத்தின் தமிழ் மறுபதிப்பில் இவர் தான் கதாநாயகி.