சமூக நலனை மையமாக வைத்து உருவாகியுள்ள 'அடங்க மறு'

சமூக நலனை மையமாக வைத்து உருவாகியுள்ள 'அடங்க மறு'

1 mins read
4a5e8ec3-2b55-4d01-bce4-2a4978e74052
-

ஜெயம் ரவி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படம் 'அடங்க மறு'. இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ரா‌ஷி கன்னா. கார்த்திக் தங்கவேல் இயக்கும் இப்படம் சமூக நலனை மையமாக வைத்து உரு வாக்கப்படுகிறது. "ஊருடன் ஒத்து வாழ வேண்டும் என்பார்கள். அதே சமயம் நம்மைச் சுற்றி நடக்கும் அநீதியைத் தட்டிக் கேட்டால் மட்டுமே சமூகநலன் காக்கப்படும் என்பதை இப்படத்தில் வலியுறுத்துகிறேன். மதன் கார்க்கி கைவண்ணத்தில், சாம் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் நிச்சயம் ரசிகர்களைக் கவ ரும். எதிர்வரும் 21ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்," என்கிறார் கார்த்திக் தங்கவேல்.