'சிலுக்குவார்பட்டி சிங்கம்' வெளியீடு

'சிலுக்குவார்பட்டி சிங்கம்' வெளியீடு

1 mins read
510aa15d-2e5d-48fc-a0f8-83ac8cf9e9e5
-

விஷ்ணு விஷாலுக்கு நல்ல நேரம் தொடங்கிவிட்டது போலும். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' படத்துக்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து சூட்டோடு சூடாக அவரது அடுத்த படமும் வெளியீடு காண உள்ளது. 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' என்ற தலைப்பில் உருவாகியுள்ள அப்படம் எதிர்வரும் 21ஆம் தேதி வெளியாகிறதாம். இது முழு நீள நகைச்சுவைப் படம் எனத் தகவல். செல்லா செய்யாவு இயக்கி உள்ளார்.

விஷ்ணு விஷால் ஜோடியாக ரெஜினா கெசான்ட்ரா நடிக்க, ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். மேலும் ஆனந்த் ராஜ், யோகி பாபு, லிவிங்ஸ்டன் எனப் பலர் உள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, விஷ்ணு விஷாலே தயாரித்துள்ளார். 'ராட்சசன்' படத்தைத் தொடர்ந்து இதிலும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளவர், மூன்று மாதங்களுக்குள் தன் நடிப்பில் இரு படங்கள் அடுத்தடுத்து வெளியானது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.