'எவனும் புத்தனில்லை' என்ற பெயரில் உருவாகும் புதுப்படத்தை இயக்கி வருகிறார் எஸ். விஜய சேகரன். முதல் படம் என்றாலும், அதன் மூலம் சமுதாயத்துக்கு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என விரும்புகிறாராம். "படத்தின் தலைப்புக்கான அர்த்தம் படம் பார்க்கும்போது புரியும். உள்ளங்கையில் உலகம் என்று வருணிக்கப்படும் டிஜிட்டல் உலகம்தான் கதைக்களம். மனித வாழ்க்கை எவ்வளவு உயரமான இடத்தில் இருந்தாலும், அடிப்படை வசதிகள் கிடைக்கி றதோ இல்லையோ, அங்கே டிஜிட்டல் உலகம் மலையேறி வந்து தன் ஆட்டத்தைத் தொடங்கி விடும். சுவாசிக்க பிராணவாயு குறைவாக உள்ள இடத்திலும் கூட ஆண்ட்ராய்ட் கைபேசி இயங்கும். இந்தப் பின்னணியில் உண்மை நிகழ்வு ஒன்றின் தாக் கத்துடன் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன்," என்கிறார் விஜய சேகரன்.
நவீனத்துவம் காரணமாக மலைக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் பாதிக்கப்படுவதை விவரித்துள் ளாராம். அந்தக் கிராமத்தில் வசிக்கும் அண்ணன், தங்கை, இவர்கள் இருவரையும் சுற்றி வாழும் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுகின் றனர். இந்த டிஜிட்டல் யுகம் ஒரு பக்கம் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி வருவது நாட்டுக்கான வளர்ச்சியாக இருந்தாலும், இன்னொரு பக்கம் ஆபத்து களையும் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பதை தனது படம் தெளிவாக சுட்டிக்காட்டும் என்கிறார் இயக் குநர் விஜயசேகரன்.
"படித்தவர்களும் சரி, படிக்காத வர்களும் சரி, இன்றைய பெற் றோர்கள் பதின்ம பருவத்தில் இருக்கும் தங்கள் பிள்ளைகளை எப்படிக் கையாள்வது என்ற சிக்கலில் தவித்துக் கொண்டிருக் கிறார்கள். அந்தச் சிக்கலை டிஜிட்டல் யுகம் எப்படி மேலும் சிக்கலாக்குகிறது என்பதையும் அதிலிருந்து எப்படி நம்மைத் தற்காத்துக் கொள்வது என்பதை யும் அண்ணன், தங்கை கதா பாத்திரங்களை வைத்துக் கதை சொல்லியுள்ளேன். அதுக்காக பாச மழையைப் பொழியும் அண்ணன், தங்கை கதையாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம்.

