வாய்ப்பைத் தட்டிப்பறிக்கவில்லை என்கிறார் ஐஸ்வர்யா ராஜே‌ஷ்

வாய்ப்பைத் தட்டிப்பறிக்கவில்லை என்கிறார் ஐஸ்வர்யா ராஜே‌ஷ்

1 mins read
aa835e5b-08fb-4dc4-b4bc-3b0df749513b
-

நல்ல படங்களில் மட்டுமே இவரைப் பார்க்க முடியும் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கேற்ப இவர் நடிக்கும் படங்களுக்கான விமர்சனம், வசூல் ஆகியவையும் திருப்திகர மாகவே உள்ளன. "சினிமாவுக்கு வந்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏதோ இப்போதுதான் கால் பதித்தாற்போல் இருக்கிறது," என்று ஆச்சரி யப்படுபவர், முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். அதிலும் அண்மையில் வெளி யான 'வடசென்னை' அவரை அழைத்துச் சென்றிருக்கும் உயரமே வேறு என்று கோடம் பாக்கப் புள்ளிகள் மெச்சுகின் றனர்.

இந்தப் படத்தில் நாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் அமலா பால். அதேபோல் 'சாமி 2' படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் திரிஷா. இதனால் பிறரது வாய்ப்பை தட்டிப் பறிப்பதாக ஐஸ்வர்யா மீது புகார் கூறப்பட்டது. ஆனால் தமக்கு அப்படியொரு எண்ணம் அறவே இல்லை என்கிறார் ஐஸ்வர்யா. "முதலில் இந்த விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ள நடிகைகளே என்னைப் பற்றி தவறாக நினைக்க வில்லை. விக்ரம் சாருடன் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்தபோது தான் 'சாமி 2' வாய்ப்பு தேடி வந்தது. அப்போது திரிஷாவை ஒப்பந்தம் செய்ததோ, அவர் நடிக்க மாட்டேன் என்று சொன்னதோ எனக்குத் தெரியாது.

"படத்தில் நடித்த பிறகுதான் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நான் எந்தப் பதிலும் சொல்லவில்லை. எனக் கான கதாபாத்திரத்தில் முடிந்த வரை சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளேன்.