பின்னணிப் பாடகி சின்மயி மீது கடும் கோபத்தில் உள்ளார் நடிகர் ராதாரவி. அண்மையில் ராதாரவியின் மீது எழுந்த பாலியல் தொல்லைப் புகாரை ஆதரிக்கும் விதமாக சமூக வலைத் தளத்தில் சின்மயி பதிவிட்டது முதல் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் மலேசியாவில் ராதா ரவிக்கு 'டத்தோ' பட்டம் வழங்கப்பட்ட தாகக் கூறப்படுவது உண்மையல்ல என்று சின்மயி தெரிவித்திருந்தார். இதனால் ராதாரவி கடும் அதிருப்தியில் உள்ளார். சின்மயி அனைத்து விஷயங்களி லும் பொய் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சாடியுள்ளார். "எனக்கு 'டத்தோ' பட்டம் வழங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளன.
இந்தப் பட்டத்தை யார் யார் வழங்குகிறார்கள் என்ற விவரம் கூடத் தெரியாமல் இருக்கிறார் சின்மயி. "எனவே அவரைச் சும்மா விடப் போவதில்லை. எனக்குப் பட்டம் தந்தவர்களே அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். "வைரமுத்துவை முதலில் மிரட்டிப் பார்த்தார். பலவிதமாக தகவல்கள் பரப்பினார். அடுத்து என்னையும் மிரட்டப் பார்க்கிறார் சின்மயி. தற்போது சென்னைக்கு வெளியே இருக்கிறேன். "சென்னை திரும்பிய தும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன். ," என்று காட்டத்து டன் கூறியுள்ளார் ராதாரவி.

