பார்வதி நாயர் நடிப்பில் உருவாகும் புதிய படம் 'மின்னல் வீரன்'. மதியழகன் தயாரித்துள்ள இப்படத்தை மரகத நாணயம் புகழ் ஏ.ஆர்.சரவணன் இயக்கியுள்ளார். அதர்வா நாயகனாக நடிக்க, டி.இமான் இசையமைத்துள்ளார். அதர்வாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் பார்வதி. "நிறைய உருப்படியில்லாத கதைகளைக் கேட்டு களைத்துப் போயிருந்தேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் 'மின்னல் வீரன்' கதையைக் கேட்க நேர்ந்தது. முழுக்கதையையும் கேட்ட உடனேயே, அருமையான படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாகத் தோன்றியது," என்கிறார் பார்வதி. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிடும் வகையில் படக்குழுவினர் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.
அதர்வா, பார்வதி நாயர் ஜோடி சேர்ந்து நடிக்கும் 'மின்னல் வீரன்'
1 mins read
-

