கர்ணன் வேடத்துக்கு தயாராகும் விக்ரம்

1 mins read
843ebb09-ca7c-45b7-9f45-5d5b8a8ac718
-

ஒருபக்கம் அடிதடி படங்கள், மறுபக்கம் தன் நடிப்பாற்றல் வெளிப்படுத்தும் கதைகள் என கச்சிதமாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் விக்ரம். அடுத்து ஆர்.எஸ். விமல் இயக்கத்தில் உருவாகும் 'மகாவீர் கர்ணா' படத்தில் இவர்தான் கர்ணனாம். இதற்காக மீண்டும் உடல் எடையைக் கூட்டியிருப்பவர், குதிரையேற்ற பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். இது 300 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்ட படம். கர்ணன் கதாபாத்திரத்துக்காக 30 அடி உயரமுள்ள ரதம் தயாராகி உள்ளது. இதில் கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபர் கோவிலில் இருந்து படக்குழுவினர் மணி ஒன்றைப் பெற்றுள்ளனர். அந்த மணி இந்த ரதத்தில் இடம்பெறுமாம். ஒரேசமயத்தில் தமிழ், மலையாளம், இந்தி என மும்மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை மேலும் 32 மொழிகளில் உடனுக்குடன் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளனர். இதனால் உற்சாகத்துடன் படப்பிடிப்புக்கு தயாராகி வரும் விக்ரம், இப்படம் பெரியளவில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.