நட்பை மெச்சும் படத்தில் பிரியா

நட்பை மெச்சும் படத்தில் பிரியா

1 mins read
e8314eb0-502d-4f3c-bb50-5dcaab2f736a
-

பிரியா பவானி சங்கர் அடுத்து ஜீவா, அருள்நிதி இணைந்து நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் என்பது தெரியும். இதில் அவர் யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் எனும் விவரம் தெரியாமல் இருந்தது. தற்போது கசிந்துள்ள தகவலின்படி மஞ்சிமா மோகன் இரு நாயகர்களில் ஒருவரான ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். எனவே, அருள்நிதிக்கு ஜோடியாகத்தான் பிரியா நடிப்பதாகத் தகவல். தற்போது அதர்வாவுடன் 'குருதியாட்டம்', எஸ்.ஜே. சூர்யாவின் 'மான்ஸ்டர்' ஆகிய இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் பிரியா பவானி சங்கர். இதையடுத்து அருள்நிதியின் படத்தில் இணைகிறார். நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்படத்தில் அருள்நிதிக்கும் ஜீவாவுக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுவது போலவே இரு நாயகிகளுக்கும் சரிசமமாக வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக பிரியா தரப்பு தெரிவிக்கின்றது. இப்படத்தை ராஜசேகர் இயக்குகிறார்.