நான்கு மாவட்டங்களில் 'அய்யா ஆதிமூலம்' சிலைகள்

1 mins read
8da3e77b-89d7-4eff-9873-e802a720db5d
-

பாலாஜி தரணிதரனின் இயக்கத்தில் 'சீதக்காதி' படம் இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் 80 வயது நிரம்பிய முதியவர் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவரின் கதாபாத்திரம் தான் 'அய்யா ஆதிமூலம்'. அண்மையில் படத்தின் முதல் விளம்பரமாக சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் 'சீதக்காதி' படத்தில் விஜய் சேதுபதி ஏற்றுள்ள அய்யா கதாபாத் திரத்தின் மெழுகுச் சிலை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது மேலும், 4 மாவட்டங்களில் 'அய்யா' சிலையைத் திறந்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு மளமளவென்று சிலைகள் தயாராகிக்கொண்டு இருக்கின்றன.

2013ல் கதையைத் தயார் செய்த பாலாஜி தரணிதரன் படத்தில் 80 வயது கிழவராக நடிக்க அமிதாப் பச்சனிடம் கேட்கப்போகிறேன் என்று விஜய் சேதுபதியிடமே கூறினாராம். ஆனால் ஐந்து ஆண்டில் விஜய் சேதுபதியின் அபார வளர்ச்சியால் அவரையே நடிக்க வைத்துவிட்டார். '96' 'சீதக்காதி' படங்களில் ஒரே நேரத்தில் நடித்தபோதும் 'சீதக்காதி' படம்தான் தன்னுடைய 25வது படமாக இருக்க வேண்டும் என்று அப்போதே உறுதியாக சொல்லி அதற்கு ஏற்றார்போல படங்களில் நடித்தாராம் விஜய் சேதுபதி.