தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘2கே லவ் ஸ்டோரி’ இளையர்களுக்கு அறிவுரை கூறும்படி இருக்காது: சுசீந்திரன்

1 mins read
9c68fe0d-11a2-461b-92d2-59e2dbff4151
‘2கே லவ் ஸ்டோரி’ டிரெய்லரில் இடம்பெறும் காட்சி. - காணொளிப் படம்: டிஐ சவுண்ட் ஃபேக்டரி / யூடியூப்

சென்னை: வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘2கே லவ் ஸ்டோரி’.

‘2கே கிட்ஸ்’ என்றழைக்கப்படும் இன்றைய இளம் இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது என்று தந்தி போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படம் காதலர் தினமான இம்மாதம் 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையே ‘2கே லவ் ஸ்டோரி’ பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இயக்குநர் சுசீந்திரன், “இப்படம் 2கே கிட்சுக்கு அறிவுரை கூறும்படி இருக்காது, அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறும்படி இருக்கும். இவர்கள் எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இப்படம் உணர்த்தும்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்