தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஜனநாயகன்’ படத்தில் நடிக்கும் 3 இயக்குநர்கள்

1 mins read
eb11944f-4da1-4e2c-9dc6-769118160b96
(இடமிருந்து) விஜய், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன். - படம்: ஊடகம்

மதுரையில் தனது கட்சி மாநாட்டை நடத்திவிட்டு, உற்சாகத்துடன் அடுத்தகட்ட பணிகளைத் தொடங்கியுள்ளார் விஜய்.

அவர் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் குறித்து அவ்வப்போது சுவாரசியமான தகவல்கள் கசிந்துவருகின்றன.

அந்த வகையில், தவெக கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் ‘ஜனநாயகன்’ படத்தில் போராளி வேடத்தில் நடித்துள்ளாராம். அதுவும், அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக, கையில் தீப்பந்தம் ஏந்தி குரல் எழுப்பும் வேடமாம்.

இன்னொரு சுவாரசியத் தகவலாக, இந்தப் படத்தில் மூன்று இளம் இயக்குநர்கள் நடித்திருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இளம் இயக்குநர்களான அட்லீ, லோகேஷ், நெல்சன் திலீப்குமார் ஆகிய மூவரும்தான் அந்த இயக்குநர்கள். மூவருமே விஜய்க்கு மிக நெருக்கமானவர்கள்.

கதைப்படி, மூவரும் செய்தியாளர்களாக நடித்துள்ளனர். விஜய் நடத்தும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று, அவர்கள் கேள்விகளை எழுப்புவதாக ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்