‘புஷ்பா-2’ படத்துக்காக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரூ.300 கோடி ஊதியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் முழுமையாகத் தயாராகும் முன்பே 1,000 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது.
திரையரங்குகளில் வெளியாகும்போது ரூ.2,000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. மொத்த வசூலில், பத்து விழுக்காட்டை ஊதியமாகத் தர வேண்டும் எனக் கேட்டுள்ளாராம் அல்லு அர்ஜுன்.