31 ஆண்டுகளுக்கு பின் இணையும் ‘ராஜா’க்கள்

1 mins read
80477638-5c36-4467-ad96-f1935994a937
படம்: - மனோஜ் பாரதிராஜா

இயக்குநர் சுசீந்திரனின் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி வரும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தை நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குகிறார்.

திரையுலகில் முதல் முறையாக இயக்குநராக அறிமுகம் ஆகிறார் மனோஜ்.

புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார்.

இப்படத்தின் மூலம் 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் ‘நாடோடி தென்றல்’ ஆகும்.

தற்போது ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்திற்காக இருவரும் இணைந்துள்ள நிலையில் இளையராஜா இசையில் உருவான பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பாடல் அனைவரின் இதயங்களையும் தொடும் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையும் இப்படத்தை தாம் தயாரிப்பது மகிழ்ச்சி தருவதாக இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குநர் மணிரத்னத்திடம் ‘பம்பாய்’ படத்தில் உதவி இயக்குந‌ராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்