ஒரே நேரத்தில் 34 படங்கள், அவற்றின் இயக்குநர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற உள்ளது.
‘கல்லூரி’, ‘பரதேசி’, ‘தென் மேற்குப் பருவக்காற்று’ உள்ளிட்ட பல நல்ல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் செழியன்.
‘டூ லெட்’ என்ற படத்தை இயக்கி பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.
திரைப்பட நுணுக்கங்கள் தொடர்பாக பல நல்ல புத்தகங்களை எழுதியிருப்பதுடன் ’ஃபிலிம் ஸ்கூல்’ என்ற திரைப்படப் பயிற்சி நிறுவனத்தையும் நடத்[Ϟ]துகிறார் செழியன்.
இந்நிலையில், அவரது பயிற்சி நிறுவனத்தில் படித்த 34 மாணவர்கள், 34 சுயாதீனப் படங்களை இயக்க உள்ளனர்.
இந்த அறிமுக விழாவில் ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம், ரவி வர்மன், படத்தொகுப்பாளர் பி லெனின் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

