தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘புஷ்பா-2’ படத்தில் 4 இசையமைப்பாளர்கள்

1 mins read
ef3c3dff-ab36-4160-84b7-2ca909c294f2
‘புஷ்பா-2’ படத்தில் அல்லு அர்ஜுன். - படம்: ஊடகம்

‘புஷ்பா 2’ படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்றி உள்ளனர்.

இன்று இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்பு வெளியாகும் நிலையில், அடுத்த மாதம் 5ஆம் தேதி இப்படம் திரைகாணும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இவர் இசையமைப்புப் பணியில் உரிய கவனம் செலுத்தவில்லை என்று புகார் எழுந்த நிலையில், இசையமைப்பாளர் தமன் இப்படத்துக்குப் பிண்ணனி இசையமைப்பதாக தகவல் வெளியானது.

இதை கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது தமனும் உறுதி செய்தார். இவரைத்தவிர சாம் சிஎஸ், அஜனிஷ் லோகநாத் என மேலும் இரு இசையமைப்பாளர்கள் ‘புஷ்பா 2’ படத்துக்காகப் பணியாற்றி வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்