பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான அமீர்கான், அண்மையில் கெளரி ஸ்ப்ராட் என்பவரைத் தனது மூன்றாவது மனைவியாகக் கரம் பிடித்தார்.
ஏற்கெனவே ரீனா தத்தா, கிரண் ராவ் ஆகியோரைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற அமீர்கான், ஏறக்குறைய 25 வருடங்களுக்கும் மேலாகத் தனது நெருங்கிய தோழியாக இருந்த கெளரியை தற்போது கரம்பிடித்துள்ளார்.
மும்பையில் உள்ள அமீர்கானின் இல்லத்தில் இந்தத் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.
திருமணம் எளிமையாக முடிந்தாலும், மணப்பெண் கௌரிக்கு அமீர்கான் அணிவித்த திருமண மோதிரம் தற்போது ஒட்டுமொத்த பாலிவுட்டையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த மோதிரத்தின் பின்னணியில் பிரம்மாண்டமான உழைப்பும் ரசனையும் ஒளிந்திருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மோதிரத்தின் மையப்பகுதியில் உலகிலேயே மிகவும் அரிதான ‘கேபோசோன்’ (Cabochon) ரக மாணிக்கக் கல் பதிக்கப்பட்டுள்ளது. அதனைச் சுற்றிலும் கண்ணைப் பறிக்கும் வகையில் 40 இயற்கை வைரங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த ஒரே ஒரு மோதிரத்தை நுணுக்கமாக வடிவமைப்பதற்காக மட்டும் சுமார் 136 திறமையான கைவினைப் பொற்கொல்லர்கள் இரவு பகலாக உழைத்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 256 மணிநேர கடும் கூட்டு உழைப்பில் இந்த வைர மோதிரம் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

