சீனாவில், சீன மொழியில் மறுபதிப்பு செய்யப்பட்டு 40 ஆயிரம் திரைகளில் வெளியாகிறது ‘மகாராஜா’ படம்.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘மகாராஜா’ திரைப்படத்தை சீன மொழியில் மறுபதிப்பு செய்து சீனாவில் வரும் 29ஆம் தேதி வெளியிட உள்ளனர். அலிபாபா குழுமம் இப்படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவில் ‘மகாராஜா’ திரைப்படம் 40,000 திரைகளில் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் ‘டங்கல்’ திரைப்படம் ஏற்கெனவே ரூ.1,300 கோடி வசூலை வாரிக் குவித்தது. ‘டங்கல்’ நிகழ்த்திய சாதனையை ‘மகாராஜா’ திரைப்படமும் நிகழ்த்துமா என்று தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.