தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘தேவரா’ ஏழு நாள்களில் ரூ.405 கோடி வசூல்

1 mins read
e10db01a-9b8b-445e-b08f-af4b115688c0
‘தேவரா’ படத்தில் ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர். - படம்: ஊடகம்

ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ‘தேவரா’ திரைப்படம் உலகம் முழுவதும் 7 நாட்களில் ரூ.405 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘தேவரா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘சுறா’, ‘சிலம்பாட்டம்’ படங்களைப்போல இருப்பதாக பலரும் விமர்சித்தனர்.

ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் முதல் நாளில் ரூ.172 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. இந்நிலையில், படம் வெளியாகி 7 நாள்களில் உலக அளவில் ரூ.405 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்