தமன்னா நடனமாடிய ஒரு பாடல் இணையத்தில் இதுவரை 50 கோடி பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழில் ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ எனத் தொடங்கும் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி அசத்தியிருந்தார் தமன்னா.
இதையடுத்து, இந்தியில் வெளியான ‘ஸ்திரி-2’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆஜ் கி ராத் ராத்’ என்ற பாடலுக்கும் அவர் அருமையாக நடனமாடி உள்ளார்.
தமன்னாவின் நடன அசைவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இப்பாடலைப் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், யூடியூப் தளத்தில் இப்பாடல் 50 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.
இதனால் உற்சாகம் அடைந்துள்ள தமன்னா, இப்பாடல் உருவான விதத்தை காணொளியாக எடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.