குட்டி உடை போடுவது தவறில்லை

குட்டி உடை போடுவது தவறில்லை

1 mins read
7386df46-bc44-4ed7-92b5-4101348dde5e
-

இயக்குநர் விஜய்யைப் பிரிந்து அமலா பால் தற்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். விவாகரத்துக் கேட்டு நீதிமன்றம் சென்ற பிறகு குட்டி குட்டி உடை அணிந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அவருக்கு இப்போது வாடிக்கையாகிவிட்டது. வலைத்தளங்களில், "கணவரைப் பிரிந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். விருந்துகளுக்கு குட்டி குட்டி உடை அணிந்து கும்மாளம் போடுகிறார்," என்று செய்திகள் வந்தன. அதைப் படித்த அமலா பாலின் ஆதரவாளர்கள், "பிடித்த ஆடை அணிவது, முக ஒப்பனை செய்வது ஒன்றும் தவறில்லை. கணவரைப் பிரிந்த பிறகு விரத்தியுடன் வாழாமல் வெகு விரைவில் வாழக் கற்றுக்கொண்டு விட்டார்," என்று அவருக்குப் பரிந்து பேசி வருகின்றனர்.