ரசிகர்கள் எதிர்பாராத வகையில் தனுஷ் அளித்த கிறிஸ்துமஸ் விருந்து

ரசிகர்கள் எதிர்பாராத வகையில் தனுஷ் அளித்த கிறிஸ்துமஸ் விருந்து

1 mins read
2967b77d-3f7e-4403-b0d5-47e721dcc6f8
-

தனுஷ் தனது ரசிகர்களுக்கு எதிர்பாராத வகையில் கிறிஸ்துமஸ் விருந்தளித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ராணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'என்னை நோக்கி பாயும் தோட்டா'. கவுதம் மேனன், தனுஷ் இருவரும் முதன்முறையாக இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இப்படத்தின் சுவரொட்டிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது படத்தின் முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளார் தனுஷ்.