சேதுபதியுடன் ஜோடி சேரும் திரிஷா

1 mins read
7eb30adf-62d4-4449-b52d-63cf4866d444
-

திரிஷா புதிய படம் ஒன்றில் முன்னணி நாயகன் விஜய் சேது பதியின் ஜோடியாக நடிக்க உள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஆறு படங்கள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான படங்கள் ரசிகர் களிடம் வரவேற்பைப் பெற்றன. அடுத்து 'புரியாத புதிர்', 'கவண்' உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. ஏற்கெனவே விஜய் சேதுபதியுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்தார். இப்போது புதிய படத்தில் அவருடன் திரிஷா ஜோடி சேர்ந்திருக்கிறார். இதை 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பிரேம்குமார் இயக்குகிறார். விஜய் சேதுபதியும் திரிஷாவும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்துக்கு '96' என்று பெயர் வைத்துள்ளனர். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.