நடிகர் பிரபுவின் 60வது பிறந்தநாளையொட்டி ரஜினி நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனும் நடிகருமான பிரபுவுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு 60 வயது ஆகிறது. இந்நிலையில், பிறந்தநாளையொட்டி பிரபுவை அவரது அன்னை இல்லத்தில் நடிகர் ரஜினியும் கமலும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ரஜினி நேரில் வாழ்த்தியது பிரபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்தச் சந்திப்பின்போது நடிகர் விக்ரம் பிரபு மற்றும் பிரபு குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் உடனிருந்தனர். ரஜினியும் பிரபுவும் 'குரு சிஷ்யன்', 'தர்மத்தின் தலைவன்', 'சந்திரமுகி', 'குசேலன்' உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
பிரபுவை நேரில் வாழ்த்திய ரஜினி
1 mins read
-

