கதாநாயகியான கேரள அழகி '4ஜி' படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு நாயகியாக நடித்து வருகிறார் 'மிஸ் கேரளா' காயத்ரி சுரேஷ். இப்படத்தை இயக்குநர் சங்கரியி டம் உதவி இயக்குநராகப் பணியாற் றிய வெங்கட் இயக்குகிறார். சதீஷ், சுரேஷ் மேனன் முக்கிய கதா பாத்திரங்களை ஏற்றுள்ளனர். காயத்ரி சுரேஷ் 'மிஸ் கேரளா' அழகிப் பட்டம் வென்றவர். இவர் தமிழில் நாயகியாக நடிக்கும் முதல் படம் இது. ஹைதராபாத், சென்னை யில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந் துள்ளது. ஜனவரி இரண்டாவது வாரத்தில் சென்னையில் அடுத்தக்கட்ட படப் பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ள னராம். தமிழில் அறிமுகமானது காயத்ரிக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாம். "ஜி.வி.பிரகாஷ் உட்பட ஒட்டு மொத்த படக்குழுவினரும் என்னி டம் நட்பாகவும் சகஜமாகவும் பேசிப் பழகுகிறார்கள். எனக்கு நல்ல தொடக்கம் அமைந்துள்ளது," என பூரிப்புடன் சொல்கிறார் காயத்ரி.
கதாநாயகியான கேரள அழகி
1 mins read
-

