'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார் கவுதம் மேனன். அடுத்த தாக 'துருவ நட்சத்திரம்' என்ற படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதில் விக்ரம் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் அவர் 'சால்ட் அண்ட் பெப்பர்' தோற்றத்தில் தோன்ற இருப்ப தாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது. அடுத்து நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார் கவுதம் மேனன். இப்படத்தில் இரு வேடத்தில் தோன்றுகிறாராம் நிவின் பாலி. அவருக்கு வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வில்லனாக நடிக்க வைக்க முயற்சி
1 mins read
-

