பூஜா தேவரியாவுக்குப் பதிலாக சாந்தினி

பூஜா தேவரியாவுக்குப் பதிலாக சாந்தினி

1 mins read
1e00afe3-c788-495e-9fb8-8af2d8b7a5bf
-

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான 'மெட்ரோ' படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர் சிரிஷ். அப்படத்தைத் தொடர்ந்து தரணீதரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். 'ராஜா ரங்குஸ்கி' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்துக்கு முதலில் பூஜா தேவரியா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தின் பூசையிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டவுடன் உடல்நிலை சரியில்லாமல் போகவே படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக் குப் பதிலாக தற்போது நாயகியாக சாந்தினி நடித்து வருகிறார்.