ரஜினிகாந்த்: ஜல்லிக்கட்டு வேண்டும்

ரஜினிகாந்த்: ஜல்லிக்கட்டு வேண்டும்

1 mins read
7b3a89e0-8f71-4158-89bb-b61730f36e16
-

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திரண்டிருக்கும் வேளையில் சிம்புவைத் தவிர பிரபல நடிகர்கள் எவரும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த விகடன் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர், "ஜல்லிக் கட்டு தமிழர்களின் கலாசாரம். கலாசாரத்தில் எப்போதும் கை வைக்கக்கூடாது. பெரியவர்கள் ஒரு கலாசாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். என்ன கட்டுப்பாடு வேண்டுமானாலும் விதியுங்கள். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். அதற்குத் தடை விதிக் காதீர்கள்," என்றார்.