ராகவா லாரன்ஸ், சக்தி வாசு, ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'சிவலிங்கா'. கன்னட மொழியில், சிவராஜ் குமார் நாயகனாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழில் 'சிவலிங்கா' என்ற தலைப்பில் மறுபதிப்பு செய்தி ருக்கிறார் பி.வாசு. இப்படம் பிப்ரவரி யில் வெளியீடு காண உள்ளது. 'சிவலிங்கா' படத்தின் இசை யமைப்பாளர் தமன். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடை பெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவ கார்த்திகேயன், பிரபு, சசிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், 'சிவலிங்கா' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'ரங்கு ரக்கரா' பாடலுக்கு லாரன்சும் சிவகார்த்தி கேயனும் நடனம் ஆடினார்கள். விழாவில் பேசிய லாரன்ஸ், சிவகார்த்தியன் நடித்து வரும் புதிய படத்தில், தான் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்திருப்பதாகத் தெரி வித்தார்.
லாரன்சுடன் நடனமாடிய சிவகார்த்திகேயன்
1 mins read
-

