'ஒரு நாள் கூத்து' படத்தின் ஒரு காட்சியில் தினேஷ், நிவேதா பெத்துராஜ்

'ஒரு நாள் கூத்து' படத்தின் ஒரு காட்சியில் தினேஷ், நிவேதா பெத்துராஜ்

2 mins read
620c8ef6-e939-4760-84b2-170798686114
-

விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் நடிக்க ஆசைப்படுவதாக கூறுகிறார் நிவேதா பெத்துராஜ். இவர் 'ஒரு நாள் கூத்து' படத்தில் நாயகியாக அறிமுகமானவர். அம்மணியின் சொந்த ஊர் கோவில்பட்டியாம். ஆனால் துபா யில் வளர்ந்தவர். தற்போது உதய நிதி ஸ்டாலினுடன் 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். அடுத்து ஜெயம் ரவியுடன் 'டிக் டிக் டிக்' மற்றும் ஒரு தெலுங்குப் படம் ஆகியவற்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வேறு சில வாய்ப்புகளும் தேடி வருகின்றனவாம். "நான் அறிமுகமான 'ஒரு நாள் கூத்து' படத்தில் நல்ல வேடம் அமைந்தது. அதில் ஒன்றி நடித்ததால் நல்ல பெயர் கிடைத்தி ருக்கிறது. அதைப்பார்த்து தான் 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி னார்கள்.

"எனது முதல் படத்தில் நக ரத்துப் பெண்ணாக நடித்தேன். உதயநிதி படத்தில் தேனி பகுதி யில் உள்ள கிராமத்துப் பெண் ணாக நடித்திருக்கிறேன். நகரத் தில் வளர்ந்த எனக்கு கிராமத்து பெண்களுக்குரிய பாவாடை, தாவணி அணிந்து நடித்தது புது மையாக இருந்தது. இந்த வேடத்தை ரசித்து நடித்திருக்கி றேன். "அடுத்து ஜெயம் ரவியுடன் 'டிக்.. டிக்.. டிக்' படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. "இனி விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நாயகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அது விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது," என்கிறார் நிவேதா.