கவுண்டமணி: நிம்மதியாக வாழவிடுங்கள்

கவுண்டமணி: நிம்மதியாக வாழவிடுங்கள்

1 mins read
46f7a842-2684-46e6-9e5a-1d93500dcc4e
-

75 வயதுக்கு பிறகு சினிமாவில் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்ற ஆசையெல்லாம் கவுண்டமணிக்கு கிடையாது. ஆனால், அப்படியிருந்தவரை '49ஓ' படத் தில் நடிக்கவைக்க சில வருடங்களாக இயக்குநர்கள் துரத்திய பிறகுதான் அப்படத்தில் நடித்தார். இதன் விளைவு, அதில் நடித்த தைப் பார்த்து 'வாய்மை', 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடை யாது' ஆகிய படங்களிலும் அவரை ஒப்பந்தம் செய்தனர்.

இதில் 'வாய்மை' படம் எப் போதோ முடிந்தபோதும் இன்னும் திரைக்கு வரவில்லை. அடுத்ததாக 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படம் இறுதிக்கட்ட பணியில் உள்ளது. '49ஓ' எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அடுத்தடுத்து கதா நாயகனாக நடிக்கவேண்டும் என் பதில் கவுண்டமணிக்கு பெரிதாக ஆர்வம் இல்லையாம். இருப்பினும் சில இயக்குநர்கள் தொடர்ந்து கதைகளுடன் அவரைத் துரத்தி வருகின்றனர்.

அப்படி ஒரு இயக் குநர் சில மாதங்களாகவே ஒரு போலிஸ் கதையை வைத்துக் கொண்டு கவுண்டமணியிடம் சொல்லியே தீருவேன் என்று பிடி வாதமாக அலைந்து கொண்டிருக்கிறாராம்.