தூத்துக்குடி: மாலத்தீவுக்கு கப்பல் ஒன்றில் கடத்திச் செல்லப்பட இருந்த ரூ.80 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களைக் கடலோர காவல்படையின் உதவியுடன் தூத்துக்குடி காவல்துறையினர் தடுத்தனர்.
இதையடுத்து, அந்த போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போதைப்பொருள் கடத்திச் செல்லப்படுவது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின்படி, வருவாய் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்தக் கப்பலை நடுக்கடலில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 30 கிலோ எடை கொண்ட, செறிவூட்டப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கப்பலில் இருந்த இந்தோனீசியாவைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 11 பேரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

