அஜித்தை வைத்து இன்னொரு படமும் இயக்க உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன் என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே வலம் வருகிறது.
ஜிவி.பிரகாஷ் நடித்த ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்குமாரை வைத்து எடுத்த ‘குட் பேட் அக்லி’ படம், அஜித் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், மீண்டும் அஜித்துடன் இணைவது குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.
“அஜித்துடன் இன்னொரு படத்தில் இணைகிறேன். இது குண்டர் கும்பல் குறித்த படமாக இருக்காது. வேறு கதைக்களமாகத்தான் இருக்கும். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.
“இந்த ஆண்டு பல பெரிய படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் ‘குட் பேட் அக்லி’யும் இருப்பதில் மகிழ்ச்சி. அதைத் தவிர, நல்ல கதைகளுக்குப் படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று கூறியுள்ளார் ஆதிக்.

