லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான ‘கூலி’ திரைப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றது.
இதையடுத்து, அவர் கதாநாயகனாகப் படம் ஒன்றில் நடிக்கவிருப்பதாகவும் அதற்குப் பிறகு கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ படத்தை அவர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே, அவர் அமீர்கான் நடிப்பில் ‘சூப்பர் ஹீரோ’ கதையை இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது.
அதை, அமீர்கானும் லோகேசும் உறுதி செய்திருந்த நிலையில், சூர்யாவுக்குச் சொல்லப்பட்ட ‘இரும்புக்கை மாயாவி’ கதை அது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அப்படம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்தித் திரையுலக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முழு கதையையும் முதலில் முடித்துவிட்டு, சில மாதங்களுக்குப் பிறகுதான் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும் என்று அமீர்கான் கூறியதாகவும் இது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றுவோம், தற்போது வேண்டாம் எனக் கூறி இருவரும் ஏகமனதாகப் பிரிந்தனராம்.