ஒரு முறை அணியும் உடையை மறுதடவை எந்த நடிகர், நடிகையும் அணிந்து நான் பார்த்ததில்லை. இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறியுள்ளார் அமீர்கான்.
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமீர்கானே இப்படிச் சொல்லியிருப்பது குறித்து வலைத்தளவாசிகள் பலரும் ஏராளமான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
“பெரும்பாலும் நான் ஒரு முறை பயன்படுத்தும் உடையை தூக்கி வீசுவதில்லை. என்னிடம் 20 ஆண்டுகளுக்கு முந்தைய ஆடைகள்கூட பத்திரமாக உள்ளன.
“ஒரு நிகழ்ச்சியில் என்னை ஒரு ஆடையில் நீங்கள் பார்த்தால், இன்னொரு நிகழ்விலும் அதே ஆடையில் நான் இருப்பதை பார்க்கலாம்.
“ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வோர் ஆடை அணியும் நடிகன் நான் கிடையாது.
“ஆனால் நடிகர்கள், நடிகைகள் பலரும் ஒரு முறை ஓர் உடையை பயன்படுத்தினால், மறுமுறை அதைப் பயன்படுத்துவதில்லை. அது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை. எனது சில பழைய உடைகள் கிழிந்துபோனால் கூட அதைக் கிழிந்த இடத்தில் தைத்து பயன்படுத்தி இருக்கிறேன்.
“அதுபோன்ற ஆடையில் நான் பொது இடங்களில் கூட பங்கேற்று இருக்கிறேன்,” என்று அமீர்கான் கூறியுள்ளார்.
“அமீர்கான் சொல்வது உண்மைதான். ஒரே மாதிரியான ஆடையில் அவரை பலமுறை பார்த்துள்ளோம். அவரது எளிமை பாராட்டுக்குரியது.
தொடர்புடைய செய்திகள்
“சூப்பர் ஸ்டார் நடிகரே இதுபோல் இருப்பது ஆச்சரியம்தான்,” என சமூக ஊடகத்தினர் பலரும் அமீர்கானைப் பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.

