நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தம்பதியர் இடையேயான பிளவு மேலும் பெரிதாகி வருகிறது.
இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி அறிக்கைகள் வெளியிட்டு வரும் நிலையில், விவாகரத்துக்குப் பின்னர் தமக்கு ரவி மோகன் மாதந்தோறும் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இவர்களின் விவாகரத்து வழக்கு மே 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்தக் கோரிக்கையை ஆர்த்தி தரப்பு முன்வைத்தது.
இதையடுத்து, இந்தக் கோரிக்கை தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு ரவி மோகன் தரப்புக்கு உத்தரவளித்து விசாரணையைத் தள்ளிவைத்தார் நீதிபதி.

