தமிழில் இரண்டாவது சுற்றைத் தொடங்கிய அப்பாஸ்

1 mins read
3a832018-1ccd-46dd-8f79-9727c6a5d930
அப்பாஸ். - படம்: ஊடகம்

நடிகர் அப்பாஸ் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க வந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் முன்னணி நடிகராக வலம்வந்தவர் அப்பாஸ். பின்னர் வாய்ப்புகள் குறையவே, திரையுலகை விட்டு மெல்ல விலகினார். ஒரு கட்டத்தில் அவர் நியூசிலாந்தில் வசிப்பதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் படத்தில் நடித்து முடித்துள்ளார் அப்பாஸ்.

அடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் இவரை நடிக்க வைத்துள்ளனர்.

இப்படத்தில் ஏற்கெனவே ரவி மோகன் வில்லனாகவும் அதர்வா முக்கியப் பாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

இப்போது அப்பாஸ் இவர்களுடன் இணைந்திருப்பதாகப் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘பராசக்தி’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

குறிப்புச் சொற்கள்