மாற்றுத்திறனாளியான நடிகை அபிநயா, மீண்டும் ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
‘பிள்ளையார் சுழி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ரேவதி, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தீரஜ் இயக்கியுள்ளார். படத்தின் நாயகனும் இவர்தான்.
படம் இன்னும் வெளியாகாத நிலையில் நியூயார்க், இலங்கையில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது.
சிறப்பு குழந்தைகளுக்கு நமது சமூகம் எந்த அளவுக்கு ஆதரவு அளிக்கிறது என்பதை இப்படம் விவரிக்கும் என்கிறார் தீரஜ்.
‘நாடோடிகள்’ படத்தில் அறிமுகமான அபிநயா, இயற்கையிலேயே செவி, பேசும் திறன் குறைபாடு உள்ளவர்.
அதன் பின்னர் ‘ஈசன்’, ‘ஏழாம் அறிவு’, ‘வீரம்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.