இயக்குநர் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் ‘சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
இதில் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், மைசூரில் ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கியபோது நாயகன் கார்த்திக்கு காலில் காயம் எற்படவே, படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மொத்தப் படக்குழுவினரும் சென்னைக்குத் திரும்பிவிட்டனர்.
காலில் வீக்கம் ஏற்பட்டிருப்பதால் கார்த்தி ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தி உள்ளாராம். இதுவரை 80% படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.