இந்த ஆண்டு அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. கார் பந்தயப் போட்டியில் அவரது தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அரசின் பத்ம பூஷண் விருது அஜித்திற்குக் கிடைத்துள்ளது.
இந்நிலையில், அஜித்தின் இந்தச் சாதனைகளைப் பாராட்டும் விதமாக அவருக்கு தனிப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்கிறார் நடிகர் யோகி பாபு.
“அஜித் படைத்திருக்கும் சாதனைகள் சாதாரணமானவை அல்ல. நாம் அனைவரும் மனதாரப் பாராட்ட வேண்டும். அவருக்காக நடத்தப்படும் தனிப் பாராட்டு விழாவில் நிச்சயம் கலந்துகொள்வேன். அப்போது அஜித்தைப் பற்றி நான் நிறைய பேசுவேன்,” என்று கூறியுள்ளார் யோகி பாபு.