பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
படத்தைப் பார்த்த அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் வலைத்தளவாசிகள் படம் பற்றி பெருமையாகப் பதிவிட்டுள்ளனர்.
“படத்தின் மொத்த பலமே நடிகர் அல்லு அர்ஜூன்தான். சண்டை, உருக்கம், அதிரவைக்கும் வசனங்கள், நடனம் என படம் முழுவதும் வலம் வந்து தெறிக்க விடுகிறார்.
“இரண்டாம் பாகமான ‘புஷ்பா 2’ல் இயக்குநர் சுகுமாரின் திரைக்கதை அனைவரின் பாராட்டுகளையும் அள்ளியுள்ளது.
“புஷ்பாவின் கதாபாத்திரம் பற்றிய பல விஷயங்களைத் திரைக்கதையில் ஆழமாகப் பதிவு செய்து பாராட்டுகளை அள்ளுகிறார் இயக்குநர்.
ஃபகத் ஃபாசில் முதல் பாகத்தில் சிறிது நேரம் மட்டுமே வந்து போன நடிப்பு அரக்கன் ஃபகத், ‘புஷ்பா 2’ல் படம் முழுவதும் வந்து நடிப்பில் அசத்துகிறார். சைக்கோ காவலராக அனைவரின் கைத்தட்டல்களையும் பெறுகிறார்.
இசை: பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாகக் கவர்கிறது. படத்திற்கு மிகப் பெரிய பலம் பின்னணி இசைதான்.
மொத்தத்தில் ‘புஷ்பா 2’ ரசிகர்களுக்கு திரையில் விருந்து படைக்கிறது. குறிப்பாக இடைவேளைக் காட்சி அல்லு அர்ஜுன் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கிறது. அடுத்த சில நாள்களுக்கு ‘புஷ்பா 2 ’ வசூலை அள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை,” என்று பதிவிட்டுள்ளனர்.