தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெருக்கமான காட்சியில் நடிப்பது எளிதல்ல: மாளவிகா

1 mins read
6110ff31-298b-4af9-9d3c-94ea35f111f7
மாளவிகா மோகனன். - படம்: ஊடகம்

நடிகர், நடிகைகள் இடையே நல்ல புரிதல்கள் இருந்தால்தான் நெருக்கமான காட்சிகளை எடுக்க முடியும் என்கிறார் மாளவிகா மோகன்.

இது போன்ற காட்சிகளில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இப்போதெல்லாம் பல படங்களில் முத்தக்காட்சிகள் இடம்பெறுகின்றன. இதுபோன்ற காட்சிகளில் நடிகர்கள் கூச்சமின்றி நடிப்பது முக்கியம்.

“இதற்காகவே சில நிபுணர்களை நியமிக்கிறார்கள். அவர்கள் உரிய ஆலோசனைகளை வழங்கி எங்களை நடிக்க வைக்க உதவுவர்,” என்று மாளவிகா கூறியுள்ளார்.

‘பேட்ட’, ‘மாஸ்டர்’, ‘தங்கலான்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் நடித்த ‘யுத்ரா’ என்ற படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியீடு காண்கிறது. இதில் மாளவிகா முத்தக்காட்சிகளில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்