நெருக்கமான காட்சிகளில் நடிப்பதே பெரும் சவால்: அஞ்சலி

1 mins read
fb2cb406-f053-43ad-8954-ee334aaf47d5
நடிகை அஞ்சலி. - படம்: ஊடகம்

கோலிவுட் திரையுலகின் எதார்த்தமான நடிகை எனப் பெயரெடுத்தவர் அஞ்சலி. ‘கற்றது தமிழ்’, ‘அங்காடித் தெரு’, ‘தரமணி’ உள்ளிட்ட படங்களில் அவர் ஏற்றிருந்த பாத்திரங்களும் அவரது நடிப்பும் பேசப்பட்டது. இதுபோலவே தெலுங்குத் திரையுலகிலும் பல படங்களில் பாராட்டும்படி நடித்துள்ளார்.

தற்போது தமிழில் அவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படமும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள அஞ்சலி, ‘பாஹிஷ்கரனா’ என்ற இணையத் தொடரில் தற்போது நடித்து வருகிறார்.

அதில் பல நெருக்கமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். “படக்குழுவில் உள்ள பல ஆண்களுக்கு மத்தியில் அப்படியான காட்சிகளில் நடிக்கவேண்டிய சூழல் ஏற்படும். இதுபோன்ற ஒரு சூழலை எதிர்கொண்டு நடிப்பதே நடிகைகள் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்தான்,” என்று அஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்