கவர்ச்சியாக நடிப்பது மிகவும் கடினம்: பிரியா

1 mins read
8258b09d-9196-4cb8-b4b8-b760a32e1c46
பிரியா பவானி சங்கர். - படம்: ஊடகம்

தமிழ், தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார் இவர்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் தெலுங்கு பதிப்புக்கான விளம்பர நேர்காணலில் கலந்துகொண்ட பிரியா பவானி சங்கரிடம் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரியா பவானி ஷங்கர் “ கவர்ச்சியாக நடித்தால் விரைவில் பெரிய கதாநாயகியாக ஆகிவிடலாம் என கூறமாட்டேன். கவர்ச்சியாக நடிப்பது என்பது தான் திரையுலகில் மிகவும் கடினமான ஒன்று. அது என்னிடம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

ரசிகர்கள் என்னைக் கவர்ச்சியாகப் பார்க்க விரும்பமாட்டார்கள் என நான் நினைக்கிறேன். என்னுடைய வழக்கமான நடிப்பை தான் அவர்கள் விரும்புவார்கள்,” எனப் பிரியா கூறியுள்ளார்.  

குறிப்புச் சொற்கள்