‘கிரைம் திரில்லர்’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

1 mins read
80764225-ded2-4daa-b313-71e2fdb8df7e
‘தீயவர் குலை நடுங்க’ படத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ். - படம்: இந்திய ஊடகம்

‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கிரைம் திரில்லர்’ படம், ‘தீயவர் குலை நடுங்க’.

ஐஸ்வர்யா ராஜேஷ், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, வேல.ராமமூர்த்தி, பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ஜி.எஸ்.ஆர்ட்ஸ் சார்பில் ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார்.

தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

“சட்டத்தைத் தாண்டி நியாயம் இருக்கும். நியாயத்தைத் தாண்டி தர்மம் இருக்கும். ஆனால், இறுதியில் தர்மமே வெல்லும் என்கிற கதையைக் கொண்டது இந்தப் படம்.

“அர்ஜுன் விசாரணை அதிகாரியாகவும் ஐஸ்வர்யா ராஜேஷ் மர்மமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். படத்தின் அறிமுகக் காட்சி வரவேற்பைப் பெற்றுள்ளது,” என்றது படக்குழு.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்